குமரி காப்பக குழந்தைகளிடம் அசாம் போலீசார் விசாரணை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: குமரி ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட வட மாநில குழந்தைகளிடம் அசாம் போலீசார் விசாரணை நடத்தினர்.

குமரி மாவட்டம் களியாக்கவிளை அருகே உள்ள பாலவிளையில் பெதஸ்தா பிளஸ்சிங் என்ற ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு அசாம், மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த 76 குழந்தைகள் தங்கியிருந்தனர்.

இந்த காப்பகம் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து பாளை சிறுவர் கூர் நோக்கு இல்ல கண்காணிப்பாளர் சகிலா பானு தலைமையில் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 23ம் தேதி ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த இல்லம் அரசு அனுமதி இன்றி விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 76 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நெல்லை சரணாலயத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து அசாம் மாநில சமூக பாதுகாப்பு துறை இணை இயக்குனர் தலைமையில் 3 அதிகாரிகள் குழந்தைகளிடமும், பாலவிளையில் உள்ள காப்பகத்திலும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே 76 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் அசாம், மணிப்பூர் மாநிலங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த அசாம் மாநில அரசு உத்தரவிட்டது.

அதன்படி அசாம் மாநில போலீசார் நெல்லை வந்தனர் அவர்கள் சரணாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளிடமும், பாலவிளை காப்பக்கத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+