பெண் பிஷப்களை நியமிக்க சர்ச் ஆப் இங்கிலாந்து முடிவு

அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஆங்லிகன் பிரிவு கிறிஸ்தவ சபைகளில் பெண் பிஷப்கள் உள்ளனர். அதேபோல, இங்கிலாந்திலும் பெண் பிஷப்களை நியமிக்க சர்ச் ஆப் இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
இதுகுறித்த கூட்டம் லண்டனில் நடந்தது. அப்போது பெண் பிஷப்கள் நியமனத்திற்கு ஒருமித்த ஆதரவு கிடைத்தது. இருப்பினும் இந்த நியமனத்தை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து வருகிற ஜூலை மாதம் மீண்டும் கூடி முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சர்ச் ஆப் இங்கிலாந்தின் முடிவுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பெண்களை நியமித்தால் சபையில் இருந்தே விலகிவிடப் போவதாக அவர்கள் அறிவித்து உள்ளனர்.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் - இயேசு நாதருக்கு ஆண்கள் மட்டுமே சீடர்களாக இருந்தனர். பெண்கள் யாரும் சீடர்களாக இல்லை. எனவே பிஷப் பதவிக்கு பெண்களை நியமிக்கக் கூடாது, ஆண்கள் மட்டுமே வர வேண்டும் என்கிறார்கள்.
ஆனாலும் மனம் தளராத சர்ச் ஆப் இங்கிலாந்து தடையை மீறி பெண் பிஷ்பகளை நியமிப்போம் எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மான்செஸ்டர் பிஷப்பும், வலது சாரி பாதிரியாருமான நிகல் மெக்கல்லோச் கூறுகையில், மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதம் முடியவில்லை. ஜூலை மாத இறுதியில் இது முடிவுக்கு வரும் என்றார்.
பெண் பிஷப்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டால், 2012ம் ஆண்டுக்குள் பெண் பிஷப்கள் நியமனம் முடிவடையும் எனத் தெரிகிறது.
முதல் பெண் பிஷப்களாக கேனான் ஜேன் ஹெட்சஸ் (வெஸ்ட்மின்ஸ்டர்), கேனான் லூசி வின்க்கெட்( செயின்டா பால்ஸ்) ஆகியோர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications