மீண்டும் அட்டகாசம் - நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அட்டகாசம் செய்துள்ளனர்.
இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த சமயத்தில் இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் சற்று ஓய்ந்திருந்தது. தற்போது மீண்டும் வாலாட்டத் தொடங்கியுள்ளனர்.
நாகை அக்கரை பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு 2 விசைபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில கி.மீ தூரம் அவர்கள் சென்ற போது திடீரென இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும் சுற்றி வளைத்தனர்.
பின்னர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 3 முறை சுட்டனர். மேலும் தண்ணீரிலும் சுட்டனர். இதனால் அக்கரைபேட்டை மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மீனவர்களை எச்சரித்து இலங்கை கடற்படையினர் அனுப்பினர்.
இன்று காலை கரைக்கு திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு குறித்து மற்ற மீனவர்களிடம் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications