நடுவானில் விமானங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

கடந்த சனிக்கிழமை அன்று கோலரேடோவில் உள்ள பவுல்டர் முனிசிபல் விமான நிலையத்தின் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும், பைப்பர் பானீ விமானம், சிறிய ரக கிளைடர் விமானத்தை இணைத்தபடி பறந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது மற்றொரு சிறிய ரக சைரஸ் விமானத்துடன் எதிர்பாராத விதமாக பைப்பர் விமானம் மோதியது.
இதில் இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்து கீழே விழுந்து சிதறின. சைரஸ் விமானத்தில் பயணித்த 11 வயது சிறுவன் மற்றும் அவனின் தாயார் இருவரும் பலியானார்கள். பைப்பர் விமானத்தின் பைலட்டும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications