சுவூதிதியில் பணிபுரிவோர் குடும்பத்தை அழைத்துச் செல்ல விசா விதிமுறைகள் தளர்வு
கடையநல்லூர்: சவூதி அரேபியாவில் பணி புரிபவர்கள் தங்களது குடும்பத்தை உடன் அழைத்து செல்வதற்கான விசா நிபந்தனைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவில் பணிபுரியும் சுமார் 70 லட்சம் பேர் மகிழ்ச்சியைடைநதுள்ளனர்.
தமிழகம், கேரளா உள்பட இந்தியா முழுவதும் இருந்தும் பல லட்சம் பேர் சவூதி அரேபியா, துபாய், குவைத், பஹ்ரைன், ஓமன் உள்பட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் துபாய் உள்பட பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் பெரும் சம்பளத்திற்கு ஏற்ப தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்து வர அந்நாட்டு அரசுகள் விசா வழங்குகிறது.
ஆனால் சவூதி அரேபியாவை பொறுத்தவரை டாக்டர், என்ஜினியர் தவிர மற்ற பணியாளர்கள் தங்களது மனைவி உட்பட குடும்பத்தை அழைத்து வர இதுவரை அனுமதியில்லாமல் இருந்தது.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் பணிபுரியும் எலெக்டிரிஷியன், சூபர்வைசர், ஏசி மெக்கானிக், ரெப்ரிஜிரெட்டர் மெக்கானிக் உள்பட பலர் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து வாழ்வதால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேர்வதால் குடும்பத்தினரையும் உடன் அழைத்து செல்ல விசா வழங்குமாறு அந்நாட்டு மன்னரிடம் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் வலியுறுத்தின. இதேபோல் இந்தியாவும் வலியுறுத்தி வந்தது.
இதையடுத்து குறிப்பிட்ட விகிதத்திற்கு அதிகமாக சம்பளம் பெறும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வர சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவில் பணிபுரியும் சுமார் 70 லட்சம் பேர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் சவூதி அரேபியாவில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications