அரசு பஸ்-பள்ளி வேன் மோதல்: 40க்கும் மேற்பட்டோர் காயம்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம், உச்சிப்புளியில் உள்ள கடற்படை அலுவலர் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகளுக்கான மத்திய அரசுப் பள்ளி மண்டபத்தில் இயங்கி வருகிறது.
இன்று காலை பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டது. உச்சிப்புளி அருகே சென்றுகொண்டிருந்த போது வேன் மீது எதிரே வந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பள்ளிக் குழந்தைகள், வேன் டிரைவர் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் என 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications