பில் கிளின்டனுக்கு நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 63 வயதான அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள பிர்ஸ்பிடேரியன் மருத்துவமனையில் வியாழன் கிழமை மாலை அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது கிளின்டன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் முன்னாள் அதிபரின் செயலாளர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பதவிக்காலத்துக்கு பின்னர், கிளின்டன் தனது அறக்கட்டளை மூலமாகவும் ஐநா உள்ளிட்ட இதர அமைப்புகளின் மூலமாகவும் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் ஹைத்தி பூகம்ப நிவாரணப் பணிகளுக்காக அவர் ஐநாவின் சிறப்புத் தூதராக அனுப்பப்பட்டார்.

ஏற்கனவே பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்ட கிளின்டன் தற்போது அதிக பணிச்சுமை காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவரின் செயலாளர் கூறினார்.

எனினும் அடுத்த சில நாட்களில் ஹைத்தியில் தனது பணியை கிளின்டன் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+