கள்ளச் சாராயம்: 2 பேர் பரிதாப சாவு; 8 பேர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகில் உள்ள கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த இருவர் பலியானார்கள்.
மேலும், 8 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள விளம்பூர் கிராமத்தில் இந்த கோர சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
சாராயத்தை குடித்த உடனடியாக 10க்கும் மேற்பட்டோர் அதே இடத்திலேயே வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை தூக்கிச் சென்று செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் இரண்டு பேர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
மற்ற எட்டு பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications