குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் கலசம் திருட்டு
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் கோபுர கலசத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில் மிகவும் பிரசித்த பெற்ற பழமையான கோயிலாகும். இங்கு மூலவர் விமானத்தில் 1960ம் வருடம் பொருததப்பட்ட செம்பினால் ஆன கலசம் இருந்தது. இதனை நேற்று முன்தினம் யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் எடை ஓன்றரை கிலோ ஆகும.
இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி ராமலிங்கம் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்கு பதிவு செய்து கலசத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications