ராகுல் 19ம் தேதி புதுவை வருகை- 15 நாட்களில் 2வது விசிட்
புதுச்சேரி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வருகிற 19ம் தேதி மீண்டும் புதுச்சேரி வருகிறார். கடந்த 15 நாட்களில் புதுச்சேரிக்கு அவர் வருவது இது 2வது முறையாகும்.
சமீபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் 19ம் தேதி பேசவுள்ளார் ராகுல் காந்தி. மேலும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் பயிற்சி தரப் போகும் பயிற்சியாளர்களையும் அன்றைய தினம் அவர் தேர்வு செய்யவுள்ளார்.
ராகுல் காந்தி பேசவுள்ள கூட்ட இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்தார்.
கடந்த 5ம் தேதிதான் ராகுல் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அங்கு ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
