உதகை மாணவர்களுக்கு அரிப்பு நோய்: பள்ளிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

குன்னூர்: உதகையி்ல் வெலிங்டன் ராணுவ மையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 10 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு திடீரென அரிப்பு நோய் பரவியுள்ளதால், இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் எம்ஆர்சி ராணுவ மையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தப் பள்ளிகளில் கடந்த சில நாள்களுக்கு முன் 10 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு உடலின் கொப்புளங்கள் ஏற்பட்டன.

அதைத் தொடர்ந்து காய்ச்சலும், இருமலும் ஏற்பட்டது. மேலும் வாய், கண், காது போன்ற பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு நோய் வேகமாக பல மாணவ, மாணவியருக்கும் பரவியது.

இதையடுத்து சென்னையிலிருந்து வந்த ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் இந்த நோய் பரவலைத் தடுக்க உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடவும் உத்தரவிட்டப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+