களியாக்கவிளை காப்பக விவகாரம் - கிறிஸ்தவ மதபோதகர் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

களியாக்கவிளை: களியாக்கவிளை அருகே குழந்தைகள் காப்பகத்தில் வெளிமாநில சிறார்களை கொடுமைப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த கிறிஸ்தவ மத போதகர் ஷாஜி கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் களியாக்கவிளை அடுத்த காரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. கிறிஸ்தவ மதபோதகரான இவர் பாலவிளையில் சிறுவர் காப்பகம் நடத்தி வந்தார். இங்கு வெளிமாநில சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். போதகரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஊர்மக்கள் இதுகுறித்து அரசுக்கு புகார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 23ம் தேதி இரவு நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் காப்பகத்தில் சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி தங்க வைக்கப்பட்டிருந்த 76 சிறுவர்களை மீட்டு சென்றனர்.

சிறுவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், மனரீதியாக பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் ஷாஜி மீது களியாக்கவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த ஷாஜி காப்பகத்தில் இருந்து ஓடிவிட்டார்.

தப்பியோடிய ஷாஜியை பிடிக்க டிஐஜி கண்ணப்பன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் ஷாஜியின் உறவினர்கள், காப்பகத்துக்கு வந்து சென்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் கேரளாவில் உள்ள ஒரு மதபோதகர் ஆதரவில் ஷாஜி தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சபாபதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கேரளா சென்று பாலக்காட்டில் பதுங்கியிருந்தஷாஜியைக் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+