ரயில்வே விசாரணை - விரைவில் மேலும் ஒரு எண் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே விசாரணைக்காக 138 என்ற புதிய தொலைபேசி சேவை எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

'ரயில்வே என்கொயரி'க்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 139 எண்ணில் ஒரு நாளைக்கு சுமார் எட்டு லட்சம் அழைப்புகள் வருவதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதிகமான அழைப்புகளால் பல பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய முறையில் பதில் அளிக்க இயலாமல் போவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏராளமான ரயில் சேவகைகள் பாதிக்கப்பட்டன. அந்த சமயங்களில் பயணிகள் ஏராளமானோர் இந்த இலவச தொலைபேசி சேவையை பயன்படுத்தினர்.

அப்போது பலருக்கும் இணைப்பு கிடைக்காமல் தவிக்க நேர்ந்தது. இதுபோன்ற பிரச்னைகளை கருத்தில் கொண்டு, கூடுதலாக 138 என்ற எண்ணையும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு தேவையான அனுமதியை தொலைத்தொடர்புத் துறையும் வழங்கி விட்டது. கூடிய விரைவில் இந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+