பங்கு சந்தையில் ரூ10000 கோடி முதலீடு செய்யும் எல்ஐசி

இதன் மூலம் நடப்பாண்டில் எல்ஐசி முதலீடு செய்துள்ள தொகை ரூ. 60 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் நிலை காப்பீட்டு நிறுவனம் அரசுக்கு சொந்தமான எல்ஐசி. வாடிக்கையாளர்களின் காப்பீட்டுத் தொகைக்கு அதிக லாபம் அளிப்பதற்காக பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறது.
இதுவரையில் பங்குச் சந்தையில் ரூ. 50 ஆயிரம் கோடி முதலீடு செய்திருந்த இந்த நிறுவனம், வரும் மார்ச் இறுதியில் முதலீட்டுத் தொகையை ரூ. 60 ஆயிரம் கோடியாக உயர்த்த முடிவு செய்தது.
சர்வதேச தேக்க நிலை மற்றும் அமெரிக்காவின் லேமன் சகோதரர்கள் நிதி நிறுவனம் திவாலானது உள்ளிட்ட சூழலிலும், எல்ஐசி முதலீடு காரணமாக இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவிலிருந்து தப்பியது.
என்டிபிசி பங்குகளை மிக அதிக அளவில் வாங்குவதற்கு எல்ஐசி விண்ணப்பித்துள்ளது. இதைப்போல பிற அரசு நிறுவனங்கள் பங்கு வெளியிடும் போது அதிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். ஆர்இசி நிறுவன பங்குகளையும் அதிக அளவு வாங்க முடிவு செய்துள்ளதாக எல்ஐசியின் செயல் இயக்குநர் என். மோகன்ராஜ் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் 22 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்நிறுவனத்தில் 7.33 சதவீத வாக்களிப்பு உரிமையையும் எல்ஐசி பெற்றுள்ளதாக தெரிவித்தார் மோகன்ராஜ்.












Click it and Unblock the Notifications