தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா நீக்கம்
கொழும்பு: தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து முன்னாள் எம்.பிக்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது. ஆனால் சிவாஜிலிங்கம் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
இந்த நிலையில், கட்சி கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில் செயற்பட்ட காரணத்தினால் அவரையும், ஸ்ரீகாந்தாவையும் நீக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் இடதுசாரி விடுதலை முன்னணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்தே இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் டெலோ கட்சியைச் சேர்ந்தவர்கள். அதிபர் தேர்தல் சமயத்தில் இவர்கள் இருவரையும் டெலோவிலிருந்து அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நீக்கினார்.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications