அல்-கொய்தா மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது-ப.சிதம்பரம்
டெல்லி ஹூஜி தீவிரவாதிகளின் மிரட்டல் இந்தியாவை ஒன்றும் செய்து விட முடியாது. இந்தியாவுக்கு விளையாட வரும் ஒவ்வொரு வீரருக்கும் சிறந்த முறையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி எனப்படும் ஹூஜி அமைப்பின் தலைவனான இலியாஸ் காஷ்மீரி என்பவன், சமீபத்தில் விடுத்த மிரட்டலில், இந்தியாவுக்கு எந்த விளையாட்டு அணியும் வரக் கூடாது. மீறி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கூறியிருந்தான்.
இதுகுறித்து அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கூறுகையில்,
ஹர்கத் உல் ஜிகாதி, இஸ்லாமி ஹூஜி ஆகிய அமைப்புகளின் தலைவரும் அல் கொய்தா அமைப்பின் பாகிஸ்தான் தலைவருமான இலியாஸ் காஷ்மீரி, ஏசியன் டைம்ஸ் இணையத் தளம மூலம் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியாவை எந்த அச்சுறுத்தலும் ஒன்றும் செய்து விடாது. இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். இலியாஸ் காஷ்மீரி நமது நாடு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று டிக்டேட் செய்ய முடியாது.
இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் இந்தியா பணியாது, பயப்டாது, அச்சுறுத்தவும் முடியாது.
இந்தியாவி்ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி, ஐபிஎல், காமன்வெல்த் போட்டிகளுககு வரும் ஒவ்வொரு விளையாட்டு அணிக்கும், ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும், பயிற்சியாளருக்கும், அதிகாரிக்கும் சிறந்த முறையில் பாதுகாப்பு தரப்படும் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications