ரயில்வே பட்ஜெட் 2010-முக்கிய அம்சங்கள்

Subscribe to Oneindia Tamil

Raiway Budget 2010-11
-நாட்டின் 16 இடங்களை இணைக்கும் 'ரவீந்திரநாத் தாகூர்-பாரத் ப்ரீத் எக்ஸ்பிரஸ்' அறிமுகம்

-வேலைக்குச் செல்வோருக்கு சலுகை கட்டணத்துடன் கூடிய கர்ம பூமி எக்ஸ்பிரஸ்

-ரவீந்திரநாத் தாகூரின் 125வது பிறந்த நாளையொட்டி மேற்கு வங்கத்தில் இரு இடங்களில் 'கீதாஞ்சலி மியூசியங்கள்'

-ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம்

-சிகிச்சைச் செல்லும் புற்று நோயளிகளுக்கு ஏசி மூன்றடுக்கு பெட்டி, இரண்டாம் வகுப்பில் இலவச பயணம்

-வங்க தேசத்தை ரயில் பாதை மூலம் இணைக்க திட்டம்

-ரயில்வே பாதுகாப்புப் படையின் பெண்கள் பிரிவு

-விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் கூடுதல் வேலை வாய்ப்பு

-மும்பை-ஹெளராவில் லேடீஸ் ஸ்பெஷல் மாத்ரி பூமி ரயில்கள்

-பயணிகள் கட்டண உயர்வு இல்லை

-புனிதத் தலங்களை இணைக்கும் 'பாரத தீர்த்த யாத்திரை ரயில்கள்' அறிமுகம்

-கடந்த 50 ஆண்டுகளில் வருட்துக்கு 180 கி.மீ. தான் புதிய பாதை அமைத்துள்ளோம்

-10 ஆண்டுகளில் 25,000 கி.மீ புதிய பாதை அமைக்க இலக்கு

-சிறுபான்மையின மகளிருக்கு ரயில்வே தேர்வு கட்டணம் ரத்து

-ரயில்வே தேர்வை மாநில மொழிகளிலும் நடத்த யோசனை

-ரயில்வே தேர்வு ஆங்கிலம், இந்தி, உருது மொழிகள் நடத்தப்படும்.

-கொல்கத்தா ரயில் நிலையம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்

-வட-கிழக்குப் பகுதி ரயில்வே வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம்

-தேசிய அதிவேக ரயில் கழகம் அமைப்பு

-அடிப்படை வசதிகளுக்கு 40% கூடுதல் நிதி ஒதுக்கீடு

-பொருளாதார நெருக்கடியையும் மீறி கூடுதல் சரக்குகளை கையாண்டுள்ளோம்

-ரயில்வேயின் நிகர லாபம் ரூ. 1,328 கோடி

-புதிய ரயில் பாதைகள் அமைக்க ரூ. 4,411 கோடி

-2011ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரயில்வே ரூ. 6,608 கோடி டிவிடெண்ட்

-சென்னை பெரம்பூர், சித்தரஞ்சன் ரயில் பெட்டி தொழிற்சாலைகள் நவீனமயமாக்கப்படும்

-சிக்கன நடவடிக்கை மூலம் ரூ. 2,000 மிச்சம்

-ரே பரேலியில் ரயில் பெட்டி தொழிற்சாலை

-ரய்ல்வே பெண் ஊழியர் குழந்தைகளுக்கென பாதுகாப்பு மையங்கள் ( கிரெச்சுகள்)

-16 புதிய சுற்றுலா ரயில்கள் அறிமுகம்

-சிறப்பு அதிவிரைவு ரயில் பாதைகள் அமைக்கப்படும்

-ஐ.ஐ.டி, ஐ.ஐ.எமகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் இ- டிக்கெட் வசதி

-மாவட்ட தலைநகர்கள், பஞ்சாயத்துகளில் டிக்கட் கவுன்டர்கள்

-ஐ.ஐ.டி. காரக்பூரில் ரயில்வே ஆராய்ச்சி மையம்

-சோதனை அடிப்படையில் 'டபுள் டெக்கர் ' ரயில்கள் அறிமுகம்

-93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்

-அம்பாலா, திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் ரயில்வே குடி நீர் தொழிற்சாலைகள்

-அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1302 கோடி

-ரயில்வே பார்சல்களை வீடுகளிலேயே டெலிவரி செய்ய திட்டம்

-மேற்கு மண்டல ரயில்வே காரிடார் அமைக்க ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

-ரயில்வேவுக்காக நிலம் தரும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

-ரயில்வே சார்பில் பாட்டில் நீர் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்

-சிக்கன நடவடிக்கைகளால் ரயில்வே ஏராளமான நிதியை மிச்சம் பிடித்துள்ளது

-ஏசி பெட்டி ரயில் கட்டணம் ரூ. 20 குறையும்

-நிலம் கிடைத்தால் மே.வங்கத்தில் ரயில்வே டீசல் மையம் அமைக்கப்படும்

-இந்த ஆண்டில் 54 புதிய ரயில்கள்

-ரயில்வேவுக்காக வலுக்கட்டாயமாக நில ஆக்கிரமிப்பு இல்லை

-ஏசி பெட்டி ரயில் கட்டணம் மீதான சேவை வரி ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆகக் குறைப்பு

-உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய் கொண்டு செல்லும் சரக்குப் பெட்டிகளின் கட்டணம் ரூ. 100 குறைப்பு

-10 புதிய துரந்தோ ரயில்கள்

-21 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்

-மும்பைக்கு 101 புதிய புறநகர் ரயில்கள், இந்த ஆண்டிலேயே 54 ரயில்கள் அறிமுகம்

-5 புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்

-காரக்பூரில் ரயில்வே ஆராய்ச்சி மையம்

-ரயில்கள் மோதலை தவிர்க்க நவீன கருவிகள், சிக்னல்கள் மேம்படுத்தப்படும்

-ரயில்வே சார்பில் 'தாகூர் மியூசியம்கள்'

-சென்னை, ஹைதராபாத், டெல்லியில் ரயில்வே விளையாட்டு அகாடெமிகள்

-சட்டம்-ஒழுங்கு ரயில்வேயின் பணியல்ல.. அது மாநில அரசுகளின் பணி

-ரயில்வே பாதுகாப்பில் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவர்

-5 ரயில்வே விளையாட்டு அகாடெமிகள் அமைக்கப்படும்

-ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் 14,000 பணியாளர்கள் நியமனம்

-டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு சிறப்பு ரயில்கள்

-ரயில்வே ஊழியர்களுக்கு புதிய வீட்டு வசதி திட்டம்

-சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை

-7 மாதங்களில் 117 புதிய ரயில்கள்

-5 ஆண்டுகளில் அனைத்து ஆளில்லா ரயில்வே கிராசி்ங்குகளும் ஒழிக்கப்படும்

-ரயில் நிலையங்கள் குறைந்த விலை குடிநீர்,அடுக்கு மாடி கார் நிறுத்தங்கள்

-மருத்துவமனைகள், பல்கலைகளில் இ-டிக்கெட் வேன்கள்

-ரயில்வேயில் பெண்கள், சிறுபான்மையினருக்கு சலுகைகள்

-வருடந்தோறும் 1000 கி.மீ. புதிய ரயில் பாதை

-ரயில்வேயில் தனியார் திட்டங்களை ஊக்குவிக்க தனிக் குழு

-தனியாருடன் இணைந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது

-100 நாட்களில் தனியார் திட்டங்களுக்கு அனுமதி

-ரயில்வே தனியார்மயமாகாது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+