சிதம்பரத்தில் பிரபல ரவுடி கைது
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரத்தில் பிரபல ரவுடி ஹரி போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
சிதம்பரம் சிவபுரி ரோட்டில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற பிரபல ரவுடி ஹரி அங்குள்ள மேனேஜரை திடீர் என தாக்கினான்.
மேலும் அவரை வெட்ட முயன்றுள்ளான். இது குறித்து அந்த திரையரங்க மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் அந்த திரையரங்குக்கு விரைந்து சென்று ரவுடி ஹரியை பிடிக்க முயன்றனர்.
அப்போது ரவுடி ஹரி தப்பி ஓடியபோது கால் தவறி விழுந்து கால் எலும்பு முறிந்தது. உடனே அவனை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications