இந்தியா முழுவதையும் இணைக்கும் 16 சிறப்பு ரயில்கள்!
டெல்லி: இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் புதிதாக 16 சிறப்பு 'பாரத் தீர்த்' ரயில்கள் இயக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகா கவி ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தில் எழுதிய வார்த்தைகளை நிஜமாக்கும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் இந்த ரயில் சேவைகளை அறிவிப்பதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்தார்.
புதிய சுற்றுலா ரயில்கள் இயக்கப்படும் தடங்கள் வருமாறு:
1. ஹவுரா- சென்னை- புதுச்சேரி- மதுரை- ராமேஸ்வரம்- கன்னியாகுமரி- பெங்களூர்- மைசூர்- சென்னை- ஹவுரா
2. மும்பை- புனே- திருப்பதி- காஞ்சிபுரம்- ராமேஸ்வரம்- மதுரை- கன்னியாகுமரி- புனே- மும்பை
3. ஹவுரா- விசாகப்பட்டினம்- ஹைதராபாத்- அரகு- ஹவுரா
4. ஹவுரா- வாரனாசி- ஜம்முதாவி- அமிர்தசரஸ்- ஹரித்துவார்- மதுரா- பிருந்தாவன்- அலகாபாத்- ஹவுரா
5. ஹவுரா- அஜ்மீர்- உதய்பூர்- ஜோத்பூர்- பிகானேர்- ஜெய்பூர்- ஹவுரா
6. ஹவுரா-கயா-ஆக்ரா- பிருந்தாவன்-டெல்லி-ஹரித்துவார்-வாரனாசி- ஹவுரா
7. புனே-ஜெய்பூர்-ரானாக்பூர்-ஜெய்பூர்-மதுரா-ஆக்ரா-ஹரித்துவார்-அமிர்தசரஸ்-ஜம்முதாவி-புனே
8. புனே-ரத்னாகிரி-கோவா-பெங்களூர்-மைசூர்-திருப்பதி-புனே
9.அகமதாபாத்-பூரி-கோல்கத்தா-கங்காசாகர்-வாரனாசி-அலகாபாத்-இந்தூர்-ஓம்காரேஷ்வர்-உஜ்ஜைன்-அகமதாபாத்
10.போபால்-துவாரகா-சோம்நாத்-உதய்பூர்-அஜ்மீர்-ஜோத்பூர்-ஜெய்பூர்-மதுரா-பிருந்தாவன்-அமிர்தசரஸ்-ஜம்முதாவி-போபால்
தங்க ரயில் காரிடார்:
சரக்கு ரயில் தடங்கள் இருப்பது போல, பயணிகள் ரயிலுக்கு என பிரத்தியேகமாக தங்க ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரங்களின் மேம்பாடு ஆகியவற்றிற்கு இந்த ரயில் காரிடார் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வரும் காலங்களில் மணிக்கு 250 முதல் 350 கிமீ வேகத்தில் இயங்கும் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் இந்த தங்க ரயில் காரிடார் திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறுது என தெரிவிக்கப்பட்டது.
இந்த காரிடார் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் தேசிய அதிவிரைவு ரயில் ஆணையம் உருவாக்கப்படும் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications