நடிர்களை வற்புறுத்தி விழாக்களுக்கு அனுப்புவது அநாகரீகம்! - தா பாண்டியன்
சென்னை: விழாக்களுக்கு நடிகர்களை மிரட்டி வற்புறுத்தி அழைப்பது அநாகரீக செயல். தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த நடிகர்களுக்கும் உரிமை உண்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா பாண்டியன் கூறினார்.
தா. பாண்டியன் இன்று நிருபர்களிடம் கூறியது:
ஒரு விழாவில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை சம்பந்தப்பட்டவர்களுக்கே உள்ளது. அவர்கள் நடிகர்களாக இருந்தால் என்ன.. சாதாரண மனிதர்களாக இருந்தால் என்ன?
விழாக்களுக்கு நடிகர்களை மிரட்டி வற்புறுத்தி அழைப்பது அநாகரீக செயல். நடிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. இதனை அரசியல் மற்றும் சாதி ரீதியிலான பிரச்சினையாக்குவது தவறு, என்றார் பாண்டியன்.
தமிழத்தின் நலனுக்கு உகந்ததல்லை...
அவர் மேலும் கூறுகையில், "முல்லை பெரியாறு பிரச்சினை வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. அணை பற்றிய விவரங்களை சேகரிக்க ஐவர் குழு ஒற்றை நியமித்துள்ளது.
கேரளா சார்பில் ஒருவரும், தமிழகத்தின் சார்பில் ஒரு வரும் சேர வேண்டும். ஆனால் தி.மு.க. செயற் குழுவில் தமிழகத்தின் சார்பில் குழுவில் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர். இது தமிழ்நாட்டின் நலனுக்கு உதவியாக அமையாது. முல்லை பெரியாறு வழக்கில் மேல் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு பிரதிநிதி பங்கேற்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களை இன்றைக்கும் சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து வருகிறது. உலக நாடுகள் பலவும் இந்த மனித உரிமை மீறலை கண்டித்து பிறகும் முகாம்கள் மூடப்பட வில்லை.
இலங்கை தமிழர்கள் அவர்கள் வசித்த இடங்களுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும். இலங்கையில் சுமூகமான அரசியல் தீர்வு ஏற்படும் வரை இந்தியா ஆயுத உதவி உள்பட எந்த உதவிகளையும் செய்யக்கூடாது.
யானை மலையை குடைவதை கண்டித்து 4-ந் தேதி ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இந்த விஷயத்தில் இன்னும் அரசு தன் நிலையை தெளிவாக அறிவிக்காததாலே இந்த போராட்டம்.
விலைவாசி உயர்வை கண்டித்து இடது சாரிகள் சார்பில் வருகிற 15-ந்தேதி பாராளுமன்றத்தின் முன் போராட்டம் நடைபெறும்.
தமிழக அரசு இதுவரை யார்-யாருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது என்பதை வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட வேண்டும். இல்லையெனில் வேலை வாய்ப்பு அலுவலகத்தை மூடும் போராட்டம் நடைபெறும..." என்றார் அவர்.












Click it and Unblock the Notifications