பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- கருணாநிதி கோரிக்கை

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், உணவுப் பண வீக்கத்தால் மத்திய அரசும், மாநில அரசுகளும் கடும் பாதிப்பை சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் இந்த வரி உயர்வு உணவுப் பொருட்களின் விலை உயர்வை மேலும் கடினமாக்கி விடும்.
எனவே உடனடியாக இந்த உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம் டீசல் விலை உயர்வையாவது நிறுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளும், சாதாரண மக்களும் பலன் பெற முடியும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனவே இதில் தலையிட்டு இந்த விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸின் முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications