புதிய வரிகள்-கெளடில்யரை மேற்கோள் காட்டிய பிரணாப்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் போதுமான மழை பெய்ய வேண்டுமென்று இந்திரனை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டிக் கொண்டார்.

நேற்று மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய பிரணாப் முகர்ஜி, கடந்த ஆண்டு நாட்டின் ஒரு பகுதியில் வறட்சியால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால், மற்ற சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு பயிர்களை நாசப்படுத்தியது.

எனவே இந்த ஆண்டு நாட்டில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டுமென்று மழைக் கடவுளான இந்திரனை வேண்டிக் கொள்கிறேன்.

பொருளாதாரத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக மழை உள்ளது.

புதிய வரி விதிப்புகளை திட்டமிடும் முன் கெளடில்யரின் 'அர்த்த சாஸ்திரத்தில்' இடம்பெற்றுள்ள வரி நிர்வாக கொள்கைகளை வழிகாட்டுதலாகக் கொண்டு தான் முடிவு செய்தேன் என்றார்.

கடந்த ஆண்டும் 1984-85ல் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோதும் பிரணாப், கெளடில்யரை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

இந்திய பட்ஜெட் வரலாற்றில் இதுவரை 4 முறை கெளடில்யரின் பெயர் மேற்கோள் காட்டி பேசப்பட்டுள்ளது. 1999-2000த்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் கெளடியல்யரை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.

கி.மு. 4ம் நூற்றாண்டில் மன்னர் சந்திரகுப்த மெளரியரின் அரசவைத் தலைவராக இருந்த கெளடில்யர், இந்தியாவின் பொருளாதாரத்துறை முன்னோடியாகக் கருதப்படுபவர்.

பொருளாதார, சட்ட, வரி விதிப்பு முறைகள் குறித்து அவர் எழுதிய நூல் தான் அர்த்த சாஸ்திரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+