புதிய கட்டடங்களுக்கு வரி அதிகரிப்பு - மதுரை மாநகராட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
சென்னை: மதுரை மாநகராட்சியில் புதிய கட்டிடங்களுக்கு 4 மடங்கு வரி உயர்த்தியதை கண்டித்து மார்ச் 5ம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், 'மதுரை மாநகராட்சியில் கடந்த 2008 ஏப்ரல் முதல் புதிய கட்டிடங்களுக்கு 4 மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
பொது சீராய்வில் தெருக்களின் தரம் 8 பிரிவுகளாக மாற்றியதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுகாதார நலனில் அக்கறை காட்டப்படவில்லை. அடிப்படை வசதிகளான தார்சாலை, சாக்கடைத் திட்டம் போன்றவை மோசமாக உள்ளன.
ஒரு புறத்தில் வரிகளை அதிகப்படுத்தியும், மறுபுறத்தில் வசதிகள் குறைந்தும் வருவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் பல துறைகளிலும் நடைபெறும் ஊழலே காரணம். இதனால் ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்தும் மதுரை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரியும் மதுரை தினமணி தியேட்டர் அருகில் 5ந் தேதி காலை 10 மணியளவில் தேமுதிக சார்பில் பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications