அமெரிக்க செய்தி ஊடகங்கள் - இன்டர்நெட்டுக்கு மூன்றாவது இடம்

உள்ளூர் தொலைக்காட்சிகள், தேசியத் தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு அடுத்து இன்டர்நெட் மூலமாகவே செய்திகளை அறிவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பியூ ரிசர்ச் சென்டர் என்ற அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில், மொத்தம் 2259 இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்களில் 78 சதவீதம் பேர் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் செய்திகளை அறிந்து கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
73 சதவீதம் பேர் சிஎன்என், பாக்ஸ், சிபிஎஸ் போன்ற தேசிய தொலைக்காட்சிகள் மூலம் செய்திகளை அறிவதாக கூறினர்.
61 சதவீதம் பேர் இன்டர்நெட் செய்தித் தளங்கள் மூலம் செய்திகளை அறிவதாக தெரிவித்தனர்.
54 சதவீதம் பேர்தான் ரேடியோ மூலம் செய்திகளை அறிவதாக கூறியுள்ளனர்.
உள்ளூர் செய்தித் தாள்களுக்கு இதில் 5வது இடம் கிடைத்துள்ளது. 50 சதவீதம் பேர் இதைத் தெரிவித்துள்ளனர்.
வெறும் 17 சதவீதம் பேர் மட்டுமே நியூயார்க் டைம்ஸ் அல்லது அமெரிக்கா டுடே என்ற தேசிய அளவிலான செய்தித் தாள்கள் மூலம் செய்திகளை அறிவதாக கூறியுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 99 சதவீதம் பேர் மேற்கண்ட ஏதாவது ஒரு ஊடகத்தின் மூலமாகவே செய்திகளை அறிவதாக கூறியுள்ளனர்.
92 சதவீதம் பேர் ஒரே நாளில் பல்வேறு ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிவதாக கூறியுள்ளனர். அவர்களில் பாதிப் பேர் நான்கு அல்லது ஆறு ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிவதாக கூறியுள்ளனர்.
31 சதவீதம் பேர் ஏதாவது ஒரு செய்தி இணையதளத்தை மட்டுமே செய்திக்காக பார்ப்பதாக கூறியுள்ளனர்.
11 சதவீதம் பேர் ஐந்துக்கும் மேற்பட்ட செய்தி இணயைதளங்களைப் பார்ப்பதாக கூறியுள்ளனர்.
65 சதவீதம் பேருக்கு, குறிப்பிட்ட விருப்ப இணையதளம் ஏதும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
செல்போன் வைத்திருப்போரில் 33 சதவீதம் பேர் மொபைல் போன்கள் மூலம் செய்திகளை அறிவதாக கூறியுள்ளனர்.
செய்திகளைப் படிப்பதோடு நின்று விடாமல் கமென்ட்டுகள் அளிப்பதாக 37 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பை பியூ அமைப்பு நடத்தியது.












Click it and Unblock the Notifications