பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு- மாட்டு வண்டியில் சட்டசபைக்கு வந்த நாயுடு
ஹைதராபாத்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை பிரணாப் முகர்ஜி உயர்த்தியுள்ளார். இதைத் திரும்பப் பெறுமாறு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் திரும்பப் பெற முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறி விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை தொடங்கிய ஆந்திர சட்டசபைக் கூட்டத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மாட்டு வண்டியில் வந்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சுமார் அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு மாட்டு வண்டியில் வந்த அவர் அதன் பிறகு சைக்கிளுக்கு மாறி அதில் சவாரி செய்தபடி சட்டசபைக்கு வந்தார்.
நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நூதன முறையில் போராட்டம் நடத்தியபடி சட்டசபைக்கு வந்த நாயுடு அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு சாமான்ய மக்களை மிகவும் பாதித்துள்ளது. மக்கள் மீது இத்தகைய சுமையை ஏற்றிவிட்டு சாமான்ய மக்களின் நலன் பற்றி பிரதமர் பேசுவது பொருத்தமற்றது என்றார்.
இதேபோல பாஜக எம்.எல்.ஏ கிஷன் ரெட்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சட்டசபைக்கு வந்தார்.
சட்டசபையில் இன்று கூட்டம் தொடங்கியதும், தெலுங்குதேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள், பிரஜா ராஜ்யம் உறுப்பினர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
ஆனால் அதை அனுமதிக்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதையடுத்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications