பாலக்காட்டில் வேன்-லாரி மோதல்: கோவையை சேர்ந்த 7 பேர் பலி
கோவை: கேரள மாநிலம் பாலக்காடு அருகே இன்று அதிகாலை வேன் மீது லாரி மோதியதில் கோவையை சேர்ந்த 7 பேர் பலியாயினர்.
கோவை பீளமேடு விக்னேஷ்வர் நகரைச் சேர்ந்த சீனிவாசன் (39), அவரது மனைவி சரிதா (35), மகன் கனீஷ்கர் (5), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தினேஷ் (25), அவரது மனைவி தீபா (22), லட்சுமிஸ்ரீ என்ற 6 மாத கைக்குழந்தை ஆகியோர் குருவாயூர் கோவிலுக்கு வேனில் சென்றனர்.
வேனை ரமேஷ் (45) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்றிரவு 2 மணியளவில் கோவையில் இருந்து புறப்பட்டனர். இன்று அதிகாலை பாலக்காடு புதுச்சேரி என்ற இடத்தின் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி வேன் மீது மோதியது.
இதில் வேனில் இருந்த அனைவரும் அதே இடத்தில் பலியாயினர். லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பாலக்காடு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி வேன் கவிழ்ந்து 30 குழந்தைகள் காயம்:
தஞ்சை மாவட்டம் பூதலூரில் பள்ளி வேன் வயலில் கவிழ்ந்ததில் அதிலிருந்த 30 மாணவ, மாணவிகள் 30 காயமடைந்தனர்.
வேனின் பின்பக்க டயர் வெடித்ததால் வேன் நிலை தடுமாறி வயலில் கவிழ்ந்ததாகத் தெரிகிறது. காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications