தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்களை அடித்து விரட்டிய கேரள போலீஸ்- வைகோ கடும் எச்சரிக்கை

இதுதொடர்பாக வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட தமிழகப் பொதுப்பணித்துறை ஊழியர்களை, கேரள அரசின் காவல்துறையினர் பணி செய்யவிடாமல் தடுத்து, அடித்து விரட்டி உள்ளனர். இது மிகவும் அக்கிரமான செயலாகும்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை வந்தநாளில் இருந்தே, கேரள அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு அராஜகத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.
முல்லைப் பெரியாறு அணை, பேபி அணைப் பராமரிப்பு, தமிழக அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது ஆகும். இருப்பினும் அவ்வப்பொழுது, தமிழக அரசு அதிகாரிகளுக்கு தொல்லை கொடுப்பதும், வேலை செய்யவிடாமல் தடுப்பதும் தொடர் கதையாகிக் கொண்டு இருக்கிறது.
தற்போது முல்லைப் பெரியாறு அணையிலும் பேபி அணையிலும் பெயிண்ட் அடிப்பது, மதகுகளைச் சரிபார்ப்பது ஆகிய வேலைகளில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில், வேலை செய்த ஊழியர்களைத்தான் கேரளக் காவல்துறையினர் அடித்து விரட்டி உள்ளனர்.
ஏறத்தாழ 2006ஆம் ஆண்டு அக்டோபரிலேயே மத்திய அரசின் உளவு நிறுவனமும், முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக்கு, தமிழக அரசு தரும் ஊதியத்தில் கேரள காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவது மாற்றப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் தொழில்துறைப் பாதுகாப்புப் படையினரிடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அனுப்பிய பரிந்துரையின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
காலம் கடந்து அண்மையில்தான் இது குறித்து முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்று அறிவிப்பு அட்டைகளை ஏந்தியவாறு கேரளத்தினர் அடிக்கடி ஊர்வலம் நடத்துவதற்கும், கேரள அரசும் காவல்துறையும் அனுமதிப்பது மிகவும் விபரீதமான போக்கு ஆகும்.
தற்போது தமிழக ஊழியர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. கேரள அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளச் செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறவிடாமல் எச்சரிக்கையும் செய்வதுடன், கேரள காவல்துறையினரின் இந்த கண்டனத்திற்கு உரிய செயல்களை மத்திய அரசின் கவனத்துக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications