பெட்ரோல் மீதான வரியை தமிழக அரசு குறைக்கலாமே-விஜயகாந்த்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உணவுப் பண்டங்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் திணறுகிறார்கள். விலையைக் குறைக்க விவசாயத்தை ஊக்குவிப்போம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பட்ஜெட்டில் உரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகள் இப்போது அனைத்துப் பொருள்களின் மீதும் இறக்குமதி வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளன. இதனால் விலைவாசி மேலும் உயர வழி வகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம் பெறுகிறவர்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 12,000 சலுகை கிடைக்கிறது. அதுவும் கூடுதல் வரி விதிப்பினால் செலவாகிவிடும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்கிக் கொள்ளும் ஏமாற்று வித்தைதான் இது.
நடுத்தர மக்களுக்கே இந்த நிலை என்றால், வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத, வருமானமே இல்லாத ஏழைகளின் நிலை என்னவாகும்? குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாது குழியும் பறித்த கதையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஆட்டோ, பஸ், லாரி ஆகியவற்றின் கட்டணங்கள் உயரும்.
ரயில்வே கட்டணம் உயராது என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால் நிதியமைச்சர் ரயில்வே கட்டணத்தின் மீது சேவை வரி விதித்துள்ளார். இதன்மூலம் மறைமுகமாக ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெட்ரோலியப் பொருள்கள் மீது அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் லிட்டருக்கு 33 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று அறிகிறேன்.
பெட்ரோலியப் பொருள்கள் மீது தமிழக அரசு விதித்துள்ள வரியைக் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு மனு போடுவதற்குப் பதிலாக வரியைக் குறைத்து மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசு திகழலாம்.
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு மாநில அரசுகள் மீதும், மாநில அரசு மத்திய அரசு மீதும் பழி போடுவது மக்களை ஏமாற்றும் கபட நாடகமே.
இந்த நாடகத்தை நிறுத்திக் கொண்டு விலைவாசி உயர்வைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications