சென்னை: நீதிமன்றத்தில் வெடிகுண்டு வதந்தியால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆலந்தூர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆலந்தூர் நகரசபை அலுவலகத்துக்கு இன்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
ஆலந்தூர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறிவிட்டு மர்ம நபர் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து போலீசுக்கு தகவல் கூறப்பட்டது. போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் நீதிமன்ற வளாகத்துக்கு சென்றனர்.
நீதிமன்றத்தில் இருந்த வக்கீல்கள், ஊழியர்கள், பொது மக்களை வெளியேற்றி அப்பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் சோதனை செய்தனர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை. பின்னர் மர்ம நபர் தெரிவித்த தகவல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. தொலைபேசியில் பேசிய ஆசாமி யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications