பிரமோத் மகாஜனின் தம்பி பிரவீன் மகாஜன் மரணம்

பாஜகவில் முக்கிய தலைவராக இருந்த பிரமோத் மகாஜனின் இளைய சகோதரர் பிரவீன் மகாஜன் (50)
கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரமோத் மகாஜனை அவரது வீட்டிலேயே வைத்து பிரவீன் மகாஜன் சுட்டுக் கொலை செய்தார்.
குடும்பத்தில் சொத்து தகராறு காரணமாக பிரமோத் மகாஜனை பிரவீன் கொன்றது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை நீதிமன்றம் பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
நாசிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரவீன் மகாஜனுக்கு கடந்த டிசம்பர் மாதம் உடல் நிலை சரியில்லாமல் போனது.
பிரவீனுக்கு மூளையி்ல் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவரது உடல் நிலை மகவும் மோசமடைந்தது கோமாவில் படுத்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து மும்பை தானே பகுதியில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கோமா நிலையில் இருந்த பிரவீன் மகாஜனின் உயிர் இன்று மாலை பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications