சட்டசபை தேர்தல்-யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது-சாமி
மதுரை: தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
மத்திய பட்ஜெட்டில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன்மூலம் இந்தத் திட்டமே கைவிடப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட திமுக அரசு தவறி விட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்த மறுத்த கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் 132 அடி நீர் மட்டம் இருந்தாலும் தமிழகத்திற்கு தாராளமாக தண்ணீர் தரப்படுவதாக கேரளா அரசு மனு செய்துள்ளது. இதை எதிர்த்துக் கூட தமிழக அரசு பதில் தாக்கல் செய்யவில்லை.
தற்போது சுப்ரீம் கோர்ட் அமைத்த ஐந்து பேர் குழுவில், தமிழக பிரதிநிதிகள் இடம் பெறுவதில்லை என்ற மாநில அரசின் முடிவு தவறான முன்னுதாரணாமாகிவிடும்.
பட்ஜெட்டில் சேது சமுத்திர திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதில் இருந்து இந்த திட்டம் கைவிடப்பட்டது தெரிகிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் எவ்வித நல்ல அறிவிப்பும் இல்லை. அதில், தமிழகத்திற்கு உரிய சலுகைகளைப் பெறவும் முதல்வர் கருணாநிதி தவறி விட்டார். இவ்வாறு தமிழகத்தின் உரிமைகளை அவர் தவற விட்டு வருகிறார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கவும் தவறி கருணாநிதி விட்டார்.
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரிய மனு மார்ச் 11ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. அதில் கோயிலில் நடக்கும் விதிமுறை மீறல்கள் குறித்து சுட்டி காட்ட உள்ளேன். கோயில்கள் நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளேன்.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications