உணவு பணவீக்கம் 17.87 சதவீதமாக உயர்வு!
டெல்லி: உணவுப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக நாட்டில் பணவீக்கத்தின் அளவு 17.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தவாரம் இது 17.58 சதவீதமாக இருந்தது.
அரிசியின் விலை கடந்த வாரம் 10 சதவீதம் உயர்ந்தது. கோதுமை 14 சதவீதமும், பருப்பு தானிய வகைகள் 35 சதவீதமும்,வெங்காயம் 11 சதவீதமும், உருளைக் கிழங்கு 28 சதவீதமும் விலை உயர்வு கண்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் சக்தித் துறையில் 9.59 சதவிகிதம் உயர்வு இருந்ததால், பணவீக்க அளவிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இது பட்ஜெட்டுக்கு முந்தைய உயர்வுதான். பட்ஜெட்டின் போது பெட்ரோல் மற்றும் டீஸல் விலைகளில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
எனவே அடுத்த வாரம் பணவீக்கம் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் அமளி:
இதற்கிடையே நாட்டின் உணவு பணவீக்கம் 17.87 சதவீதமாக அதிகரித்துள்ளதையடுத்து இன்று காலை எதிர்க் கட்சி எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியி்ல் ஈடுபட்டனர். இதனால் அவையை பகல் 1 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications