நித்தியானந்தா மீதான திடீர் புகார் - முழுமையாக விசாரிக்க வேண்டும் - ராம கோபாலன்

இதுகுறித்து அவர் கூறுகையில்,
சுவாமி நித்யானந்தா புகழ்பெற்றவர். அவர் மீது இதுவரை எந்த புகாரும் இல்லை. இப்போது வெளிவந்துள்ள குற்றச் சாட்டு பற்றி விசாரிக்காமலேயே தண்டிக்கப்பட்டுள்ளார். நிஜங்களை தேடவில்லை. இந்து விரோதத்தை வளர்க்கிறார்கள்.
ஒரு பிரச்சினையை பெரிதுபடுத்துவது, ஆங்காங்கே ஆட்களை ஏவி விட்டு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவது ஆபத்தானது. எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தில் உள் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இதன் பின்னணி பற்றி முழு அளவில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.
விரும்பத்தக்கவை அல்ல - பாஜக
பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் பற்றி முழுமையாக ஆய்வு செய்த பிறகே கருத்து சொல்ல முடியும்.
இருப்பினும் இதுபோன்ற செயல்பாடுகள் விரும்பத்தக்கவை அல்ல. எப்படி இது நிகழ்ந்தது என்பது பற்றி ஆன்மீக தலைவர்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும். பின்னணியை கண்டறிந்த பிறகே முடிவுக்கு வரவேண்டும் என்றார்.
கன்னியாகுமரி சிவசேனா புகார்
இதற்கிடையே, நித்யானந்தா மீது தமிழக காவல்துறை வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து குமரி மாவட்ட சிவசேனா கட்சி செயலாளர் கண்ணன், நாகர்கோவில் எஸ்.பி ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில், 'நித்யானந்த பரமஹம்சா பல ஆன்மீக சொற்பொழிவு செய்து, சன்யாசி வேடம் தரித்து, அந்தரங்கத்தில் காம வாழ்க்கை வாழ்ந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவர் பல கோடான கோடி இந்து மக்களை சன்யாசி வேடத்தில் ஆன்மீகவாதி போல் நடித்து ஏமாற்றியுள்ளார். இதனால் இவர் ஒட்டுமொத்த இந்து மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்.
போலிச் சாமியார் நித்யானந்தா பரம்ஹம்சர் மீது தமிழக காவல்துறை வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications