ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது இலங்கை-ஃப்ரீயாக கொடுக்கிறது சீனா
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் சிங்கள ராணுவம் நடத்திய போர் முடிந்து கிட்டத்தட்ட 10 மாதமாகி விட்டது. விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறி விட்டது.
அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலரை கொன்று விட்டதாகவும், பலரை பிடித்துள்ளதாகவும் கூறியது. இருந்தாலும் தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்ட ராணுவத்தினர் இன்னும் அகற்றப்படவில்லை. அதேபோல ராணுவமும் தொடர்நது பெருமளவிலான ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது.
இது ஏன் என்று புரியவில்லை. அதி நவீன ஆயுதங்களை பெருமளவில் இலங்கை வாங்கிக் குவிக்கும் மர்மம் என்ன என்றும் தெரியவில்லை.
அதிலும் சீனா, பெருமளவிலான ஆயுதங்களை இலவசமாக தருகிறதாம். இந்த ஆயுதங்கள் கொழும்பு வந்து சேர்ந்துள்ளன.
இந்த ஆயுதங்களில் கண்ணி வெடிகளை அகற்றும் கருவிகள், கவச கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications