செம்மொழி மாநாடு: கோவைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் மாநாட்டுக்கு வர உள்ளனர்.
இதனால், மாநாட்டை ஒட்டி கோவைக்கு சிறப்பு ரயில்களை இயக்கவேண்டும் என ரயில்வே துறைக்கு தமிழக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏற்கெனவே கோடை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவைக்கு உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பு விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் முக்கிய ரயில்கள், கோடை சிறப்பு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து என கோவை வழித்தடத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது.
கோவை - இருகூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த பின்னரே கோவை உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு விரைவு ரயில்களை இயக்க முடியும் என்று தமிழக அரசிடம் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications