தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி்-கருணாநிதியிடம் மஸ்தூர் சங்கம் கோரிக்கை
மதுரை: தென்னக ரயில்வே திட்டங்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்து, கூடுதல் நிதியை பெற்றுத்தர வேண்டும் என்று தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என். கண்ணையா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என். கண்ணையா நிருபர்களிடம் கூறுகையில்,
'மானாமதுரை - விருதுநகர் அகலப் பாதையை நிறைவேற்ற 70 கோடி ரூபாய் தேவை. ஆனால், 55 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று , திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்கோடு மற்றும் பொள்ளாச்சி - கோவை பணிகள் முடிவடைய 150 கோடி தேவை. ஆனால், 65 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை- திருவாரூர் - காரைக்குடி- திருத்துறைப்பூண்டி அகலப்பாதை திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் தேவை. வெறும் 60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை - போடி, திருச்சி - காரைக்கால் - திருக்குவளை, கொல்லம் - நெல்லை, கொல்லம் - திருச்செந்தூர் - தென்காசி அகலப்பாதை திட்டங்கள் 2011 மார்ச்சிற்குள் முடிக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த திட்டங்கள் நிறைவேற ரூ 528 கோடி தேவைப்படும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்து, ஒதுக்கப்பட்ட 813 கோடி ரூபாய்க்கு பதிலாக கூடுதலாக 528 கோடியை பெற்றுத்தர வேண்டும்' என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications