பாலுணர்வைத் தூண்டிய நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ஆர்.சி. மனோகரன் போலீஸ் கமிஷனருக்கு தபால் மூலம் அனுப்பியுள்ள புகாரில்,
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்று சில வீடியோ காட்சிகளை பார்த்தேன். அவை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. நித்யானந்தாவை பிரபல நடிகை ரஞ்சிதா முத்தமிடுவது போலவும், அவரது கால்களை அமுக்கி பாலியல் உணர்வை தூண்டுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன.
பொதுமக்களும், பெண்களும், சிறு வயதினரும் இந்த காட்சிகளை பார்ப்பதால் சமூகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக நித்யானந்தா சாமியை நடிகை ரஞ்சிதாதான் வலுக்கட்டாயமாக இழுப்பது போன்ற காட்சிகள் உள்ளன. எனவே நடிகை ரஞ்சிதா செக்ஸ் உணர்வை தூண்டிய குற்றத்துக்கு ஆளாகிறார்.
இதுகுறித்து ரஞ்சிதா மீது சென்னை போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரஞ்சிதா மீதும் நடவடிக்கை-கமிஷனர் உறுதி:
இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ரஜினி, ராம சிவசங்கர், கயல், சிவபெருமாள், லிங்கன் ஆகியோர் நேற்று என்னிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். வக்கீல்களின் புகார் மனு எற்றுக் கொள்ளப்பட்டது. அந்த புகார் மனு அடிப்படையில் சுவாமி நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது சுவாமி நித்யானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை நாங்கள் கைது செய்வோம்.
சுவாமி நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அதில் உண்மை இருக்குமானால் நடிகை ரஞ்சிதா மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் எங்கு உள்ளனர் என்று தெரியவில்லை. அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இதுவரை நித்யானந்தா தொடர்பாக ஒரே ஒரு புகார்தான் வந்துள்ளது. வேறு யார் புகார் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.
மேலும் வக்கீல்கள் புகார் மனு பற்றி விசாரணை நடத்த கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து நித்யானந்த சுவாமிகள் மீது மோசடி (420 ஐ.பி.சி) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக நேற்று சென்னை போலீஸ் ஆணையரிடம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர் புகார் மனு அளித்தார்.
அதில், தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை செய்துள்ளார் நித்தியானந்தா. இந்து சாமியார் என்கிற போர்வையில் இந்து மதத்தை அவமதிக்கிறார்.
இந்த நித்தியானந்தா பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. சாமியார் என்கிற போர்வையில் பல கோடிகளை சுருட்டி உள்ளார் நித்தியானந்தா.
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அவரை கிரிமினல் வழக்கில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications