மதுவிலக்கு கோரி மனித நேய மக்கள் கட்சி மறியல்
நெல்லை: மதுவிலக்கை அமுல்படுத்த கோரி வரும் 7ம் தேதி மாநிலம் முழுவதும் 100 இடங்களில் மதுக்கடைகள் முன்பு மறியல் நடத்தப்போவதாக மனித நேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். பொதுமக்கள் கூடும் இடம், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
காந்தி, அண்ணா, பெரியார், காயிதே மில்லத் ஆகியோரின் கனவு நனவாக மதுக்கடை இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடைகள் முன் மறியல் போராட்டம் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
இதில் பங்கேற்க மதுவினை எதிர்க்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
இது போல் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதுபோல் விலைவாசி உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications