பொன்சேகா மருமகனைத் தேடி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் திலகரத்னே வீட்டில் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு தலைமறைவாகி விட்ட பொன்சேகா மருமகன் பதுங்கியிருப்பதாக கூறி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஹசன் திலகரத்னே வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினர்.

ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள பொன்சேகாவின் மருமகன் தனுனவையும் பிடித்து உள்ளே போட போலீஸார் முயன்று வருகின்றனர். அவர் பல லட்சம் முறைகேடு செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுன தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் தனது உறவினரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான ஹசன் திலகரத்னே வீட்டில் தனுன பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

திலகரத்னே இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர். தற்போது அரசியல்வாதியாக இருக்கிறார். பொன்சேகா கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இந்த நிலையில் அவரது வீட்டை சிஐடி போலீஸார் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது திலகரத்னே அங்கு இல்லை.

சோதனையின் முடிவில் தனுன அங்கு இல்லாததால் போலீஸார் திரும்பிச் சென்று விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+