வருமானத்துக்காக பொதுத்துறை பங்குகளை விற்கும் மத்திய அரசு!
டெல்லி: அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ 25000 கோடி திரட்டுவதன் மூலம் ரூ 40000 கோடி நிதி இலக்கை எட்ட முடியும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் இதுகுறித்து வருவாய் செயலர் சுனில் மித்ரா பேசியதாவது:
நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவன பங்கு வெளியீடுகள் மூலம் ரூ.25,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் இலக்கான ரூ. 40,000 கோடி வருவாயினை அடைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
ஆயில் இந்தியா நிறுவனம், தேசிய அனல் மின் நிறுவனம் (என்.டி.பி.சி.), மற்றும் (என்.எச்.பி.சி.) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வெளியிடுவதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ. 25,000 கோடி திரட்டப்படும்.
இந்த நிதியாண்டில் வெளியிடுவதாக இருந்த சட்லஜ் சல் வித்யூத் நிகாம் நிறுவன பங்குகள் வரும் நிதியாண்டில் வெளியிடப்படும்," மித்ரா தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் பங்குகளும்...
லாபத்தில் இயங்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் 10 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பங்குகள் வெளியீட்டிற்காக 60 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலை அரசு தயாரித்துள்ளது. இதற்கிடையே இன்ஜீனியர்ஸ் இந்தியா நிறுவனம் தனது பங்குகளை வெளியிடுவதற்கான ஒப்புதலை ஏற்கெனவே பெற்றுவிட்டது.
கோல் இந்தியா நிறுவனம், பி.எஸ்.என்.எல்., மற்றும் இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) பங்குகள் வரும் நிதியாண்டில் (2010-11) வெளியிடப்படும் என சுனில் மித்ரா தெரிவித்திருந்தார்.
பங்கு வெளியீடுகள் தொடர்பான நடவடிக்கைகளை வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்க நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications