கிரீஸ் நாட்டில் இருந்து தூத்துக்குடி வந்த 20 கண்டெய்னர் கழிவு-திருப்பி அனுப்ப நடவடிக்கை

இதுகுறித்து சுங்கத்துறை ஆணையர் ராஜன் கூறுகையில்,
சிவகாசியை சேர்ந்த ஸ்ரீபதி பேப்பர் போர்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கிரீஸ் நாட்டில் இருந்து 11 கண்டெய்னர்களில் 253 டன் பழைய கழிவு காகிதங்களை இறக்குமதி செய்தது. இந்த கண்டெய்னர்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது, கண்டெய்னரில் பழைய பேப்பர் கழிவுகள் தவிர மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகளும் இருந்தன.
மேலும் பஞ்சு துணி கழிவுகள், பயன்படுத்திய உள்ளாடைகள், ரப்பர் கையுறை கழிவுகளும் இருந்தன.
இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சோதனை நடத்தினர். அதில் இந்தக் கழிவுகள் பெரும் சுகாதார கேடு விளைவிக்கக்கூடியவை என்று தெரியவந்தது.
ஆனால், உண்மைக்குப் புறம்பாக கழிவு பேப்பர்கள் மட்டுமே உள்ளதாக டெல்லியை சேர்ந்த நிறுவனம் இறக்குமதி சான்று கொடுத்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல பிரெஞ்சு காலனி பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 கழிவுகள் அடங்கிய கண்டெய்னர்களையும் சுங்கத்துறை மடக்கியுள்ளது.
இதில் 217 டன் கழிவுகள் உள்ளன. இந்த 20 கண்டெய்னர்களையும் மீண்டும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த வி.வி.ஆர்.இம்பெக்ஸ் நிறுவனம் சீனாவில் இருந்து செல்போன் உதிரி பாகங்களை கடந்த ஜனவரி 21ம் தேதி இறக்குமதி செய்தது. இந்த கண்டெய்னர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு மாதமாகக் கிடக்கிறது. யாரும் பில் தாக்கல் செய்யாததால், சுங்கத்துறை அதிகாரிகள் அதை திறந்து சோதனையிட்டனர்.
அப்போது அதில் உலகின் முன்னணி செல்போன் நிறுவனங்களின் முத்திரை உள்ள செல்போன் உதிரி பாகங்கள், முன்னணி நிறுவனங்களின் கைக்கடிகாரங்களும் இருந்தன.
இவை சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருப்பதால் அந்த கண்டெய்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி என்றார்.
சென்னை வந்த ஆயில் டேங்கரில் ஊழியர் சாவு:
இந் நிலையில் சென்னை வந்த கப்பலில், ஆயில் டேங்கர் கப்பலை சுத்தப்படுத்தியபோது ஏற்பட்ட விபத்தில், ஊழியர் ஒருவர் இறந்தது தொடர்பாக 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2ம் தேதி பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவில் சென்னை வந்த கப்பலில் நடுக்கடலில் கப்பலின் ஆயில் டேங்கரை சுத்தப்படுத்தும் பணியில் 3 ஊழியர்கள் ஈடுபட்டனர். டேங்கருக்குள் இறங்கி சுத்தப்படுத்திய போது மூவருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதில் 2 ஊழியர்கள் வெளியே வந்து விட்டனர்.
ஒருவர் மட்டும் மயங்கிவிட்டார். அவரை படுக்கையை கட்டி, டேங்கரில் இருந்து மேலே தூக்கியபோது இரும்பு சங்கிலி அறுந்து மீண்டும் அவர் டேங்கருக்குள் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை குளிர்சாதன அறையில் வைத்து சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். இகு குறி்த்து துறைமுக போலீசார் விசாரணை நடத்தியபோது, பலியானவர் தூத்துக்குடியை அடுத்த புன்னக்காயலை சேர்ந்த சத்தியன் (26) என்று தெரிய வந்தது.
சத்தியன் இறந்தது தொடர்பாக கப்பலின்ல் கேப்டன் சூரத் தேவ் பாண்டே (39), துணை கேப்டன் லியோலின் அருண் (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கவனக்குறைவு காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications