மதுரையில் அண்ணா பல்கலை.-முதல்வர் அறிவிப்பார்: அழகிரி
மதுரை: மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில் முதல்வரால் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் இடையப்பட்டியில், இன்று மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பிளாஸ்டிக் தயாரிப்பு வளர்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மத்திய ரசாணயத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அடிக்கல்லை நாட்டி வைத்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், திமுக அரசு தான் தேர்தலுக்கு முன்பு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறது. இது பெருமிதம் அளிக்கிறது.
மதுரையிலும் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைள் வந்துள்ளன. இதுகுறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியும் வருகிற சட்டசபைக் கூட்டத் தொடரிலேயே இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றார் அழகிரி.
வழக்கை தள்ளுபடி செய்ய அழகிரி கோரிக்கை:
இதற்கிடையே வழக்கு தொடர்ந்த மனுதாரர் காலமாகி விட்டதால் அவருடைய பிரதிநிதி அந்த வழக்கை தொடர அனுமதிக்கக் கூடாது. எனவே என் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் மு.க.அழகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
2009-ம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மதுரை தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மோகன் தோல்வியுற்று 2வது இடத்தைப் பிடித்தார்.
தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாக கூறி, மு.க.அழகிரி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மோகன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் மோகன் மரணமடைந்தார். இதையடுத்து மோகனுக்கு பதிலாக இந்த வழக்கை வேறு யாராவது நடத்த விருப்பமுள்ளதா என்று உயர்நீதிமன்றம் கேட்டது. இதுதொடர்பாக விளம்பரமும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஏ.லாசர், மோகனுக்கு பதிலாக அவர் இடத்தில் இருந்து மோகனின் வழக்கை தானே நடத்த இருப்பதாக மனுத் தாக்கல் செய்தார்.
இதற்குப் பதில் தாக்கல் செய்யுமாறு அழகிரிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவரும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மதுரை எம்.பி. தேர்தலில் மோகன் தான் என்னை எதிர்த்து போட்டியிட்டார். லாசர் என்னை எதிர்த்து போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்துவிட்டு, தேர்தலின்போது வேட்பு மனுவை லாசரே திரும்ப பெற்றுக்கொண்டார்.
தேர்தலில் போட்டியிடாத ஒருவர், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடருவதற்கு தகுதி கிடையாது. அதற்கு சட்டங்களும் இடமளிக்கவில்லை. எனக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டுகளை பெற்றவர் மோகன்.
எனவே, நான் வெற்றி பெற்றதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடருவதற்கு அவர் ஒருவருக்கே தகுதி உண்டு. எனவே, மோகனுக்கு பதிலாக அவரது வழக்கை லாசர் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது.
மோகனுக்கான மாற்று வேட்பாளர் தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை லாசர் காட்டவில்லை. எனவே, லாசரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி தனபலான், வருகிற 15ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications