உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்துடன் இன்று மோதல் - வெல்லுமா இந்தியா?
டெல்லி: அரை இறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்ட இந்தியா இன்று இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில். இதில் வென்றால் அரை இறுதி வாய்ப்பு குறித்து கொஞ்சம் போல நாம் நம்பிக்கை கொள்ள முடியும். இல்லாவிட்டால் சுத்தமாக கதவுகள் இழுத்து மூடப்பட்டு விடும்.
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியி்ல் இந்தியா இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் முதல் போட்டியில் மட்டும் பாகிஸ்தானை வென்றது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும், 3வது போட்டியில் ஸ்பெயினிடமும் தோல்வி கண்டது.
இன்று நான்காவது போட்டியில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது. வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அணி இங்கிலாந்து. இன்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து உறுதியாகச் சொல்லமுடியாத நிலைதான்.
இருந்தாலும் தொடர்ந்து 3வது தோல்வியைத் தழுவுவதை இந்தியா தவிர்க்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 போட்டிகளில் தோல்வியுற்றதால் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு ஏற்கனவே மங்கிப் போய் விட்டது. இன்று நடைபெறும் போட்டியிலும், பின்னர் நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் வென்றால் மட்டுமே அரை இறுதி குறித்து நம்மால் ஓரளவாவது நினைத்துப் பார்க்க முடியும்.
இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடிக் கொண்டிருக்கிறது. எதிர்த்த அணிகளையெல்லாம் அது காலி செய்து விட்டு கம்பீரமாக நிற்கிறது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என சந்தித்த மூன்று அணிகளையும் புரட்டிப் போட்டு விட்டுள்ளது.
9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது இங்கிலாந்து. இந்தியாவோ 3 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.
இன்றைய போட்டியிலும், நாளைய போட்டியிலும் இந்தியா வென்றாலும் கூட, மீதமுள்ள அணிகள் பெறும் வெற்றி, தோல்விகளை வைத்துத்தான் இந்தியாவால் அரை இறுதிக்கு முன்னேற முடியுமா என்பதை கணிக்க முடியும். அப்படி ஒரு இக்கட்டான நிலை இந்தியாவுக்கு.
இந்தியா இன்று வெல்லுமா, தொடர் தோல்வி என்ற அவப்பெயரை தடுக்குமா என்பதை இன்று இரவு காணலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications