பென்னாகரத்திலிருந்து திரும்பிய தங்கபாலு கார் மீது கல்வீச்சு
தர்மபுரி: பென்னாகரத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசி விட்டுத் திரும்பும்போது தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கார் மீது கல்வீசித் தாக்கப்பட்டது.
பென்னாகரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொது கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு பேசி விட்டு தர்மபுரிக்கு காரில் புறப்பட்டார்.
தர்மபுரி அருகே சோகத்தூர் என்ற பகுதியில், இரவு 10.10 மணிக்கு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த 2 பேர் தங்கபாலுவின் கார் கண்ணாடி மற்றும் அவரை பின் தொடர்ந்து வந்த 2 கார்களின் மீது கற்களை வீசினார்கள்.
இதில் 3 கார்களின் கண்ணாடியும் உடைந்து சேதம் அடைந்தது. இதில் தங்கபாலு வந்த காரின் பின்னால் வந்த காரை ஓட்டிய டிரைவர் காயம் அடைந்தார்.
பின்னர் அந்த இரு நபர்களும் இருளில் ஓடி விட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தங்கபாலு தர்மபுரி அதியமான் ஓட்டலில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், இது சம்பந்தமாக போலீசில் புகார் செய்யப்படும் என்றார். இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்.பி. சுதாகரை சந்தித்துப் புகார் கொடுத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications