திருவண்ணாமலை அருகே 2 அரசு பஸ்கள் மோதல் - 3 பெண்கள் பலி
திருவண்ணாமலை: சென்னையிலிருந்து சென்ற அரசு பஸ்சும், சென்னைக்கு வந்த அரசு பஸ்சும், திருவண்ணாமலை அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து இன்று காலை திருவண்ணாமலைக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதேபோல, சென்னையை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
கீழ்பென்னாத்தூர் அடுத்து கோமாட்சிபாடி அருகே வந்த போது இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் இரு பஸ்களின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்தது.
இந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த 27 பேரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மேலும் 2 பெண்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் பெயர் நந்தேஸ்வரி. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர். மற்ற இரு பெண்கள் குறித்த விவரம் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான இரு பஸ்களில் ஒரு பஸ்சின் டிரைவர் செல்போன் பேசியபடியே பஸ்சை ஓட்டிச் சென்றதாக பயணிகள் கூறியுள்ளனர்.
அரசு பஸ்களில் டிரைவர்கள் பணியின்போது செல்போனை வைத்திருக்கவே கூடாது என்று சமீபத்தில்தான் அரசு தடை விதித்தது நினைவிருக்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications