மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அதிமுக ஆதரிக்கும்- ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற அதிமுக ஆதரவு தரும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற அதிமுக உறுதி பூண்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications