எந்த வசதியும் இல்லாததைக் கண்டித்து பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதம்
கொழும்பு: இலங்கை ராணுவத்தின் பிடியில் அடைபட்டுள்ள சரத் பொன்சேகா, தனக்கு தொலைபேசி வசதி அளிக்கப்படவில்லை, குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாமை ஆகியவற்றைக் காரணம் காட்டி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளாராம்.
இத்தகவலை தெரிவித்த பொன்சேகாவின் மனைவி அனோமா தனது கணவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளார் என்று கூறினார்.
அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறி பொன்சேகா கடந்த மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போது கொழும்பு நகரில் விமானப் படை கட்டுப்பாட்டில் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார் சரத் பொன்சேகா.
ராணுவ நீதிமன்ற விசாரணைக்காக அவருக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. போதிய ஆதாரங்களை சேகரித்த பின்னர் அவர் ராணுவத் தளபதியிடம் அடுத்த வாரம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
இந்நிலையில், பொன்சேகா மொபைல் போன் பயன்படுத்துவதை அதிகாரிகள் தடுத்துள்ளனர். தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்காக அவர் வைத்திருந்த மொபைல் போனை அதிகாரிகள் திடீரென வாங்கி வைத்து கொண்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த பொன்சேகா அந்த வசதியை வழங்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில்,
பொன்சேகாவுக்கு மொபைல் போன் தரவேண்டும் என்ற எந்தவிதமான அவசியமும் இல்லை. சட்டப்படி அவர் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை.
கரிசனத்துக்காக அவர் மொபைல் போன் பயன்படுத்த அனுமதித்தோம். அதை எந்நேரத்திலும் தடை செய்ய அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது.
பொன்சேகாவுக்கு தினமும் அவரின் மனைவி தான் உணவு எடுத்து வந்து கொடுத்துவிட்டு செல்கிறார். அதை எல்லாம் நாங்கள் தடுக்கவில்லையே' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications