உலகக் கோப்பை ஹாக்கி - அரை இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
டெல்லி: உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரை இறுதி வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டது இந்தியா.
நேற்று நடந்த முக்கியப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி அரை இறுதிக்கு போட்டியிடுவதற்கு இருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் தவற விட்டு விட்டது இந்தியா.
மேலும் இந்தத் தோல்வி இந்தியாவுக்கு இந்தத் தொடரில் கிடைத்த 3வது தொடர் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா. இதனால் நம்பிக்கை பிறந்தது. ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அடுத்து நடந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.
நேற்றைய வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. அரை இறுதிக்குள் நுழைந்த முதல் அணி இதுதான்.
நாளை இந்தியா தனது கடைசிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா...
முன்னதாக நேற்று நடந்த இன்னொரு ஆட்டத்தில் வலுவான பாகிஸ்தான் அணியை எதிர்பாராத வகையில் தென் ஆப்பிரிக்கா 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
இந்தத் தொடரில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த அணி தென் ஆப்பிரிக்கா. இந்த நிலையி்ல் நேற்று அது தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications