2011 சென்சஸில் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை - பிள்ளை
டெல்லி: சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது என மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 1931ம் ஆண்டுக்கு பின் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது நிறுத்தப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் கல்லூரி படிப்பு முதல் வேலை வாய்ப்பு வரை பல்வேறு தளங்களிலும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி அடிப்படையில் நடத்துவது தவிர்க்கப்பட்டு வருகிறது.
மக்கள் தொகையின் சாதிவாரியான புள்ளி விவரங்கள் இல்லாத காரணத்தால், இடஒதுக்கீடு முறையை அமல் படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கம் வரை, சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்தியாக வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக தமிழகத்தில் பாமக உட்பட லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வருகிற 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதியை ஒரு அம்சமாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
கடந்த 2001ம் ஆண்டுக்கும் பின்னர் 2011ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நாடு முழுவதும் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி அம்சம் இடம் பெறாது என மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை டெல்லியில் இன்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications