பென்னாகரத்தில் ராமதாஸ் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பாமக குற்றச்சாட்டு
பென்னாகரம்: இடைத்தேர்தல் நடைபெற உள்ள பென்னாகரத்தில் பிரச்சாரத்துக்காக வந்திருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் சட்டசபைத் தொகுதி பாமக தலைமை தேர்தல் பணிக்குழு தலைவர் வேல்முருகன் இதுபற்றி கூறியிருப்பதாவது:
டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் பென்னாகரம் தொகுதியில் இரவு 9.30 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு காரில் தர்மபுரி நோக்கி தொண்டர்களோடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ராமதாஸின் கார் ஆட்டுக்காரன்பட்டி அருகே வந்தபோது, இருளில் மறைந்திருந்த ஒரு கும்பல், ராமதாஸின் காரை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியது.
ராமதாஸின் கார் டிரைவர் முனி, சாமர்த்தியமாக வலது புறமாக காரை திருப்பினார். இதனால் பெட்ரோல் குண்டு, காரில் விழாமல் வேறு இடத்தில் சென்று விழுந்தது. இந்த சம்பவத்தில் டாக்டர் ராமதாஸ் மயிரிழையில் உயிர் தப்பினார்.
அதன் பின்பு அந்த கும்பல் இரும்பு ராடை தூக்கி வீசியது. அது டாக்டர் ராமதாசின் தனி பாதுகாவலர்கள் வந்த பைலட் வண்டியின் மேலே உள்ள விளக்கின் மீது விழுந்தது. அதில் ஒரு விளக்கு உடைந்தது.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையெனில் பாமக போராட்டத்தில் ஈடுபடும்' எனக் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications